இங்கே துலாவு

சனி, 6 ஜூன், 2015

ரயிலின் பயனம்



     யிலின் பயணம்-
ஜாதகம் பார்த்தார்கள்
சகல பொருத்தமும் பார்த்தார்கள்
  பொருந்திய பிந்தான்
போய்ப் பொண்ணு பார்த்தார்கள்
  பொண்ணு பிடிச்சிருக்கா
சொல்லுங்க மாப்புள்ள
  புடிக்கலன்னாலும்
விடப்போர்றதில்ல
  சம்மதமென்று
சமிக்ஞை எழுந்தது
   காப்பி பலகாரங்களால்
வயிறு நிறைந்தது
  தட்டு மாத்துச்சு தல நரச்சதுக
பஞ்சாங்கம் பாத்து
  நாள் குறிச்சதுக
ஆண்டவன் சன்னிதியில்
  நடந்தது திருமணம்
அக்னி சாட்சியாய்
  இணைந்தது இருகரம்
 ித்தோடு முடிந்தது
பெற்றோரின் பொருப்பு


பொண்ணு தேடும்
  சிரமம் தரவில்லை
மற்றொரு தரப்பு
  பேருந்து நிறுத்தம்தான்
பூலோக சொர்க்கம்
  அங்குதான் தேவதைகள்
அணிவகுத்து நிற்கும்
  பார்வை வலைவீசிப்
பாவையைத் தேர்ந்தெடுப்பான்
  கண்ணே மணியே என்று
கவிக்கணைகள்
  அவன் தொடுப்பான்
இரு மனமும் இணைந்தது
அது திருமணம் செய்ய இசைந்தது
சம்மதிக்கவில்லை இரு வீட்டாரும்
  பதிவுத் திருமணம் நடந்தது
ஒரு ரோட்டோரம்
  நாலைந்து ஆண்டுகள் ஓடியது
குடும்பத்தில் ஒன்று கூடியது
  சின்னச் சின்னத் தவறுகள்
பலூனாய் விரிந்தது
  குட்டிக் குட்டிக் கோபங்களும்
கொழுந்து விட்டு எரிந்தது
  புரிந்துணர்வுகள்
புதைக்கப்பட்டது
  பிடிவாதம் மட்டும்
எழுந்து நிக்குது
  அக்னி சாட்சியாய்
ஆண்டவந் முன்பும்
  மனிதன் சாட்சியாய்
சட்டத்தின் முன்னும்
  நடந்த திருமணம் நாடகமானது
விவாகரத்துக்காக
  நீதிமன்றத்தை நாடுது
தண்டவாலங்கள்
  பிரிந்து போனால்
ரயில் பயணங்கள்
  என்னவாகும்?

1 கருத்து:

  1. Kathalin nilamai intha kalaththil ivvaruthan ullathu. Ithupontra pala purinthukollamal mammutikkum kathalarkalal unmaiyana kathalaiyum makkal verukkirarkal.

    பதிலளிநீக்கு