காலமும் நானும்-
தவழ்ந்த போதும் ஓடியது,-
அமர்ந்திருந்த போதும் ஓடியது
பின்னால் பாத்துகொள்ளலாம் என்று
கிடப்பில் பல வைத்தேன்
நினைத்ததை நிறைவேற்ற நேரமிருக்கிறது
என ஒதுக்கி வைத்தேன்
காலம் கிடக்குதெனக் கண்மூடிப்
படுத்திருந்தேன்
உறக்கத்தை வரவழைத்து கனவுகளில்
திளைத்திருந்தேன்
விழித்தபோது மனது வலித்தது
நான் வீணாக்கிய நாட்களை நினைத்து
சாதிக்கலாம் என புறப்பட்டேன்
மரணம் வந்து தழுவியது
நான்தான் நடந்தேன்
காலம் ஓடிக்கொண்டே இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக