இங்கே துலாவு

வியாழன், 25 ஜூன், 2015

விந்தையான காரணம் சொல்கிறோம் நாங்கள் வீழ்ந்ததுக்கு:


விந்தையான காரணம் சொல்கிறோம் நாங்கள் வீழ்ந்ததுக்கு:
கடந்த மார்ச் 29, 30, 31, ஆகிய தேதிகளில்;
பார்வையற்றோருக்கான தென் மண்டல கிரிக்கேட் போட்டிகள்;
ஆந்திராவில் குண்டூர் பெண்கள் கிரிக்கேட் அசோசேசன் மைதானத்தில் நடை பெற்றது.
இதில் தமிழகம், தெளுங்கானா, பாண்டிச்சேரி,
ஆந்திரா, கர்னாடகா, கேரலா, என 6 அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டியில் சிறப்பாக விலையாடுபவர்கள்;
இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்
காக விளையாடும் வாய்ப்பை பெருவர்.
இத்தொடரில் இறுதி போட்டிக்கு செள்ளும் அணிகள்;
பிர மண்டலங்களில் இருந்து இறுதி போட்டிக்கு வந்த
அணிகளுடன் மோதும் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்போட்டி ஏப்பிரல் இறுதியில் ஹைதராபாத்தில் நடக்கும்.
இம்முரை தமிழக அணியின் ஆட்டம் எப்படி இருந்தது?
இம்முரை பெரும் ஆட்டம் கண்டது எனத்தான் சொல்ல வேண்டும்.
கடந்த முரை கேரலாவில் மண்டலப்போட்டிகள் நடந்த போது இறுதிப்போட்டிக்கு சென்ற தமிழகம்; இம்முரை ஒரு போட்டியில் கூட வெல்ல முடியவில்லை.
தமிழகத்துக்கு முதல் ஆட்டம்; 30-3-2015 அன்று
கர்நாடகாவுடன் நடைபெற்றது.
இதில் தமிழக வீரர்கள் முதலில் மட்டை வீசி 105 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர்;
தங்களுக்கு கொடுத்த 15 ஓவரில். தமிழகம் சார்வில் தினகரன், ரமேஸ் போன்றோர் 30-க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்தனர்; ஏனையோர் குரைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
கர்னாடகாவின் கலத்தடுப்பு அபாரமாக இருந்தது.
இந்திய அணித் தலைவரான சேகர்னாயக் தான் கர்னாடக அணியின் தலைவர்.
உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் நாம் கிண்ணம் வெல்ல காரனமாக இருந்த
39 பந்துகளில் 81 ஓட்டம் எடுத்த பிரகாஸ், அந்த அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்.
106-ரை வெற்றி இழக்காக கொண்டு விளையாடத்தொடங்கிய கர்னாடகம்,
தினகரனின் அதிவேகப்பந்துவீச்சில் ஆட்டங்கானத்தொடங்கியது.
தினகரன் 3 விக்கேட்டுகளை தன் 2 ஓவர்களில் எடுத்தார்.
அதற்குப்பிரகு நிதானமாக ஆடத்தொடங்கினர்; சேகர்நாயக்கும், லோகேசும்.
லோகேஸ் அரைச்சதம் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அந்த அணியின் துடுப்பாட்ட முதுகெழும்பு பிரகாஸ் அந்த விக்கேட்டை பரித்து எடுத்தாலே வெற்றி உறுதி என தமிழகம் நம்பியது. பிரகாஸ் தினகரனின் பந்தில் 3-ஆவது ஓவரிலேயே
ஆட்டமிழந்து வெலி ஏற; பின்னர் எங்களால் எந்த விக்கேட்டையும் எடுக்க முடியவில்லை.
அடுத்த நாள் தெளுங்காநா அணி தமிழகத்தை சந்தித்தது.
முதலில் மட்டை வீசத்தொடங்கிய தமிழகம், 114 ஓட்டங்களை எடுத்தது.
இதிலும் தமிழக வீரர்கள் சொல்லிக்கொள்ளும் படி விலையாடவில்லை.
எள்ளைக்கோடுகள் 80 மீ. தொலைவில் இருந்தது. அதன் காரணமாக 4 ஓட்டங்களை பெர துடுப்பாட்டவீரர்கள் சிறமத்தை எதிர்கொண்டனர்.
எனவே வீரர்கள் ஓடியே ஓட்டங்களை பெர வேண்டியதாய் இருந்தது. இதனால் விக்கேட்டுகள் ரண்நவுட் மூலம் பரிக்கப்பட்டது.
115 ஓட்டமெடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்தொடங்கிய தெளுங்கானா, முதல் ஓவரில் பூபதியின் அதிவேக பந்தில் முதல் விக்கேட்டை இழந்தது. அதற்கு பிறகு விக்கேட்டுகள்
குறித்த இடைவெலியில் சரிக்கப்பட, போட்டி இறுதிப்பந்து வரை நீண்டது. ஒரு ஓவரில் 8 ஓட்டமெடுத்தால் வெற்றி, கடைசி ஓவரை இந்தியா உலகக்கிண்ணம் வென்ற அணியில் விளையாடிய
ரமேஸ் வீசினார்.
தமிழக அணியின் கலத்தடுப்பும் அபாரமாய் இருந்தது. வீரர்களை ஒரு ஓட்டம் பெர விடாது முடக்கினர். ஒரு பந்தில் 3 ஓட்டம் பெற்றால் வெற்றி, கடைசிப்பந்தை ரமேஸ் வீச
ஒரு ஓட்டம் பெரப்படுகிறது. அரங்கம் நிசப்தத்தில் இருக்க, லெக் அம்பேர் முரையற்ற பந்து என அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது முக்கிய நடுவர் ஓவர்
முடிந்துவிட்டது எனக்கூறிய பின்பு லெக் அம்பேர் முரையற்ற பந்து எனக்கூறியது, தவறான தீர்ப்பு; இதன் காரணமாக கடைசிப்பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து தெளுங்கானா வென்றது.
தொடக்க வீரராக கலமிறங்கிய ரவிவர்மா ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
இப்போட்டி இரு குழுக்கலாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவுக்கு 3 அனிகள் விளையாடின. ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்.
a குழுவில் ஆந்திராவும், b குழுவில் கர்னாடகாவும் முதலிடம் பிடித்ததால் இறுதிப்போட்டியில் மோதின. முதலில் மட்டை வீசிய ஆந்திரா 20 ஓவர்களில் 225 ஓட்டங்களை எடுத்தது
பதிலுக்கு ஆடிய கர்னாடகா 20 ஓவர்களில் விக்கேட் இழக்காது 201 ஓட்டங்களை மட்டும் பெற்று 24 ஓட்டங்களால் தோழ்வியடைந்தது.
தமிழக அணியின் தோழ்விக்கான காரணங்கள்:
மிக நீண்ட நாளுக்கு பின் சர்வதேசத்தரத்திலான மைதானத்தில் போட்டி நடைபெற்றது.
அதை ஒரு மெல்போன் எனவும் சொல்லலாம்.
எள்ளைக்கோடுகள் வெகு தொலைவில் இருந்ததால் கலத்தடுப்புக்கு ஏற்ற மைதானம்.
நம் தமிழக வீரர்கள் கட்டாந்தரையில் கிரிக்கேட் விளையாடுகிறோம்.
இத்தகைய மைதானங்கள் பந்துகளை மேள் எழும்பச்செய்யும்;
அதன் காரணமாக 6 ஓட்டங்கள் அடிப்பது சுலபம்.
தமிழக வீரர்கள் ஸ்றெயிட் பேட் விளையாடுபவர்கள்;
கிராஸ்பேட் ஆடத்தெரியாதது இத்தொடரில் தோற்க முக்கியக்காரணம்.
மேள் எழும்பாத பந்தை ஸ்றெயிட் பேட் போட்டு அடிப்பது கடினம்.
அந்த மைதானம் புற்த்தரை மைதானம்;
கலத்தடுப்பு செய்பவர்கள் எவித பயமுமின்றி சாகசங்கள் செய்யலாம்;
இது கலத்தடுப்புக்கு மிகுந்த சாதகத்தன்மையை கொடுத்தது.
மொத்தத்தில் சொல்லப்போனால் ஒரு சர்வதேசத்தரம் வாய்ந்த மைதானத்தில் விலையாடியதால் தமிழகம் தோற்றது என்பதே உன்மை;
இது விந்தையான காரணம் தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக