பக்கங்கள்

இங்கே துலாவு

சனி, 6 ஜூன், 2015

அன்புள்ள முதல் காதலிக்கு,,,,,



    ன்புள்ள முதல் காதலிக்கு;
நான் மிகுந்த நலம்.
 உன் நலத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
நீ வந்ததால் நான் எத்தனை துயரத்தை அனுபவித்தேன் தெரியுமா?
நீ போன பின்பு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.
 உனக்கு மட்டும் ஏன் இனிமையான குரல் இருந்தது?
 அங்கு தான் நான் விழுந்தேன்.
அதை வைத்து அடிக்கடி பேசி இருந்தாலாவது;
 விரைவில் கேட்டுக்கேட்டு பிடிக்காமலாவது போயிருக்கும்!
திருச்சி வானொலியில் ஒலிக்கும் திரை இசை பாடல் போல!
 எப்போதாவது தான் நீ வாய் திரந்து பேசுவாய்!
உனது வாய்சை கேட்பதற்காக;
நான் வகுப்பு தலைவனான [c.p.l.] வரலாறு உனக்குத்தெரியுமா? 
 வகுப்பரையில் நீ பேசாமடந்தை!
விடுதியிலோ நீ வாயாடிக்குழந்தை!
இதன் விலைவு என்ன தெரியுமா?
 உனக்கெங்கே தெரியப்போகிறது. சொல்கிறேன் கேழ்.
கிரிக்கேட் போட்டிகலின் கோப்பைகலாக முருக்கும், மிச்சரும் இருக்கும்.
 ஒருமுரை மிச்சர் கிண்ணத்தின் இருதிப்போட்டியில்
  எளிமையான கேச்சை நான் தவரவிட அது சிக்சராகிப்போனது!
அப்புரம் என்ன, மிச்சர் எதிரணிக்குப்போனது.
 அந்தப்பிடியை ஏன் தவரவிட்டேன் தெரியுமா?
 அந்த குயில் மாடியில் பேசிக்கொண்டிருந்தது! அதில் கவனத்தை செழுத்த இப்படி நேர்ந்தது. அணிவீரர்கள் மொத்தமாய் என்னை திட்ட; அன்று நீ சத்தமாய் கத்த;
 அந்த சங்கீதக்குரலில் என்னை மரந்து; வானில் பரந்துகொண்டிருந்தேன்!
  இப்படி இழந்த கோப்பைகள் ஏராலம்.
 பெண் பேச்சை கேட்டால் முன்னேர முடியாது என இதனால் தான் சொன்னார்களோ!
அந்த பொன்னு ஒன்னையத்தான் பாக்குது என சில பார்சலி நன்பர்கள் பரிந்துரை செய்ய; பயங்கரமாய் காதல் மனதுக்குள் படரத்தொடங்கியது.
உனது பேர் வரும் பாடல்கள் எங்கேனும் ஒலித்தால்;
 நான் அதை நின்று கேட்காமல் செல்ல மாட்டேன்.
எப்பொழுது 10-ஆம்  வகுப்பு படிக்கப்போகிறோம்?
 அப்போழுது தானே டேப்ரெக்காடர்கள் கொடுப்பார்கள்;
 அதில் அவலின் பெயர் வரும் பாடல்களாக பதிந்து கேட்க வேண்டும் என மனம் துடிக்கும்.
 நானயம் சுண்டி நாள் குறித்து; காதலை உன்னிடம் சொல்ல வந்தால்,
 நீ அன்று வேறொரு பையனோடு பேசினாய்!
கோட்டைகள் சரிய; துக்கத்தோடு விடுதிதிரும்பி; தூக்கத்தில் கணவில் புலம்பினேன்.
 அடுத்த நால் விருந்து சாப்பாட்டில் கொடுத்த லட்டை எனக்கு கொடுத்தாய்!
நல்ல வேலை அல்வா கொடுக்கவில்லை.
பித்தாகரஸ் தேற்றம் கூட எலிமையாய் புரிந்தது;
பில்லைங்க மனசத்தான் புருஞ்சுக்க முடியல என புலம்பினேன் மனசுக்குள்ள!
ொரு பேப்பரை என்னிடம் கொடுத்து வாசித்துப்பார்க்கச்சொன்னாய்.
ஆர்வம் கொப்பலிக்க வாங்கினேன்;
தலைதூக்கிய ஆர்வம் தலையை தொங்கப்போட்டுவிட்டது.
காடுகளின் பயன் என தலைப்பிருந்தது!
வாசித்து முடித்துவிட்டு; இதை யார் எழுதியது எனக் கேட்டேன்.
நான் தான் என உர்ச்சாகமாய் சொன்னால்!
இவ்வளவு அருமையாய் கட்டுரை எழுதுகிறாயே!
ஒரு வித அமைதி அவளிடம்,
இந்த வாய்ப்பை விடக்குடாது என மேலே தொடர்ந்தேன்.
கட்டுரையில் வார்த்தைகளை அழகாக தேர்ந்தெடுத்து கோர்த்திருக்கிறாய்,
ஒரு பக்கத்திற்குள் முடித்திருப்பது;
கட்டுரை உலகில் ஒரு புதுமை;
என விடாமல் ஒரு சொற்பொழிவையே ஆற்றி விட்டேன்!
கையிலிருந்து விரைவாக பேப்பரை பிடிங்கியவள்;
இந்த கவிதை எப்படி இருக்கு என்று கேட்கத்தான் இந்த பேப்பரைக்கொடுத்தேன்.
எனக் கூரிவிட்டு விரைவாக நடந்தால்!
அன்று பபேசியவள் தான் அதற்குப்பிரகு நான் பேச பல முயர்ச்சிகள் செய்தும்;
பேசவைக்க முடியவில்லை!
காலங்களும் உருண்டோடியது;
10-ஆம் வகுப்பு முடித்ததும் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டால்.
இப்போதெள்ளாம் கேச்சுகளை நான்  நழுவ விடுவதில்லை!
   ஆதாரம்,
ொரு முழுப்பார்வையற்றவனின் முதல் காதல் அனுபவங்கள்
என்ற நூலிலிருந்து.
சத்தியாலய வெலியீடு ரு. நீங்கள் விரும்பியதை கொடுக்கலாம்!
பின் குரிப்பு: கட்டுரையாலரின் அனுபவமல்ல இக்கட்டுரை!
கட்டுரையாளர் சிங்கிலுக்கே சிங்கியடிக்கிறார்!
அவருக்கு எங்கே முதல் காதலி, இரண்டாவது காதலி எள்ளாம் இருக்கும்;
இவற்றை கருத்தில்கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக