இங்கே துலாவு

திங்கள், 22 ஜூன், 2015

உயரத்திலிருந்து உருண்டவர்கள்:








       உயரத்திலிருந்து உருண்டவர்கள்:    
   உயரம் என்பது கொண்டாடத்தக்க ஒன்று;

இதனால் தான் மனிதர்கள் நட்சத்திரங்களாக மாரத்துடிக்கின்றனர்.
அவரவர் பெரும் ஆதாயத்தை பொருத்து ஒரு குறித்த நபர்; அவர்களின் ஆகாயத்தில்
மின்னும் நட்சத்திரமாக மாருகிறார்.
அதை இழக்கும் போது உலகம் அவர்களை ஏரி மிதிக்கும்;
அதுவே ஒரு பெரும் வளியாக இருக்கும்.


நட்சத்திரங்களின் உருவாக்கம்:
கால ஓட்டத்தில் தேவைகள் அதிகரித்தவண்ணமே இருக்கிறது.
அதை ஈடு கட்டக்கூடிய நபர்கள் நட்சத்திரங்களாக மாறுகின்றனர்.
சிலர் வளிமையால் நட்சத்திரங்களாகின்றனர்.
சிலர் தாங்கள் அறியாமளே நட்சத்திரங்களாய் மாரிவிடுகின்றனர்.
ஆதியை மரத்தல்:
நட்சத்திர அந்தஸ்து கிடைத்த உடன்; தான் ஒரு அதிசய பிரவி என்ற என்னத்தில்
மிதக்கத்தொடங்கி விடுகின்றனர்; இதுவே அவர்களின் ஆட்டத்திற்கு முதல்
புள்ளியாய் அமைந்து விடுகிறது.
கரைந்து போகும் கதிர் சுடர்கள்:
ஒரு சிரிய கோட்டுக்குப் பக்கத்தில்; பெரிய கோடு போட்டால் அது சிரியதாகிவிடும்.
நேற்று வரை மின்னிய நட்சத்திரங்கள் இன்று மதிப்பிழப்பதற்கு இது போன்ற
நிலைதான் காரணமாக இருக்கும்.
சிலர் தங்களை மிக உயர்ந்தவர்களாக நினைத்துகொள்ளுவதாலும் மரைந்து விடுகிறார்கள்.
மிக உயரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.
புவி சுழச்சியில் பகல் முடிந்து இருல் தொடங்குதல் போல; நட்சத்திர
அந்தஸ்தும் ஒரு குரித்த காலம் வரைதான்.
எள்ளோருமே ஓடுகிற குதிரையைத்தான் மதிப்பார்கள்; ஓடி முடித்த, அன்று
சிறப்பாக ஓடிய குதிரையை மதிப்பதில்லை. அப்படி உருண்ட சில
நட்சத்திரங்களைப் பற்றிப்பார்ப்போம்
அரசியல்:
ராஜபக்சே, இவர் இலங்கை தேசத்தின் தன்னிகரற்ற தலைவர்; வடக்கில் வாகை சூடிய வேந்தர்;
இலங்கையை பல வகையிலும் முன்னேற்றியவர்.
இவரின் பேச்சுக்கு மருபேச்சே கிடையாது. இப்படிப்பட்ட நட்சத்திரம் இன்று
யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. கட்சியினர் கூட மதிப்பதில்லை; இவர்
இப்போது எந்தக் கட்சியை சேர்ந்தவரென்றே கூட தெரியாது.
இதற்கு என்ன காரணம்? இவரை சிங்கல மக்கள் தங்கள் நாயகனாகத்தான்
பார்த்தனர்; அவர் செய்த மற்றும் அவர் குடும்பத்தினறால் செய்யப்பட்ட
மோசடிகள் அவருக்கு பேரடியை கொடுத்தது.
இவரை புகழ்ந்தவர்கள் பதவியில் இருப்பதாலேயே அவ்வாரு செய்தனர். இன்றோ
யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை!
திரைத்துரை:
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்ற முதல் நடிகர்;
கடந்த நூற்றாண்டில் அதிக ரசிகர்களை தன்நகத்தே கொண்டிருந்த நடிகர்;
அவர் ஒரு ஊருக்கு செல்கிறார் என்றால் அவர் வரும் ரயில் எல்லா ஊர்களிலும்
நின்று செல்லுமாம்; அப்படி பெருமைகளை கொண்டவர் தியாகராஜபாகவதர்.
கொலைவளக்கில் சிறை சென்றதால் இவரின் அண்தஸ்த்து குறைந்தது.
சிறையிலிருந்து வெலிவரும்போது காட்சிகள் மாரி இருந்தன.
திரைத்துரையில் பெரும் மாறுதல் பாடிய திரைப்படங்கள் வட்டாரவளக்கில்
பேசத்தொடங்கி இருந்த காலத்தில்; இவர் பழய பாணியிலேயே நடித்தார்; விலைவு
படங்கள் ஓடவில்லை. கால ஓட்டத்தில் நட்சத்திரங்கள் ஒரு பொருட்டே இல்லை.
அது தனக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்பவர்களைத்தான் மகுடமலித்து
மகிழ்விக்கிறது. இறுதி காலத்தில் தங்கத்தட்டில் உணவு உண்டவர் பிச்சை
எடுத்து உண்டார். அந்த உச்ச நட்சத்திரத்தின் முடிவு சாதாரன மனிதர்களை விட
துன்பகரமாகவே முடிந்தது.
மரதி:
மக்களின் மரதி கூட சிலரை மரையச் செய்து விடுகிறது.
கப்பலோட்டிய தமிழன் என நம்மால் அழைக்கப்படுபவர் வாவு.சிதம்பரனார்.
ஆங்கிலையர்களை எதிர்க்க தனது சொத்து முழுவதையும் இழந்தார். நாட்டுக்காக
அவர் பட்ட துயர்கள் ஏறாலம். சிறை சென்று இவர் வெளிவரும்போது இவரை
எள்ளோரும் மரந்திருந்தனர். காந்தியின் எழுச்சி இவரை மரக்கச்
செய்துவிட்டது.
எதிர்பார்ப்புகளும் ஏமாற்றமும்:
யாருக்கும் நட்சத்திர அந்தஸ்த்து சும்மா கொடுப்பதில்லை.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுபவர்களுக்குத்தான் அது நீண்டகாலம்
நிலைத்திருக்கிறது.
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த கட்சி; இந்தியாவை கட்டியமைத்த
கட்சி என பெருமைகளை கொண்ட காங்கிரஸ் கட்சி இன்று இருக்கும் நிலை
பரிதாவத்துக்குறியது.
குடும்ப ஆட்சி, ஓரிடத்தில் அதிகாரம் குவிந்திருப்பதன் விலைவு இன்று
அந்தக் கட்சியை மக்கலிடம் மதிப்பை இழக்கச்செய்துள்ளது.

   உயரம் என்பது ஒரு குருகிய கால மகுடம். அதை புரிந்து கொண்டவர்கள் என்றும்
உயரத்தில் இருக்கிறார்கள்; உச்சத்தை பெரிதாக நினைப்பவர்கள், அந்த
போதையில் தன்னை மரந்து உருண்டு விழுகின்றனர்.
    ஒரு கட்டுரைப்போட்டிக்காக எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக