அனயாதீபம்:
கம்பீர தோற்றம்.
ோங்கி ஒலிக்கும் கலகக்குரல்.
எழுதுகோலால் மக்கள் வாழ்க்கையைவடித்த களைஞன் ஜெயகாந்தன்.
40 நாவல்கள், 140 சிருகதைகள்,
கட்டுரைதொகுப்புகள், மொழிபெயர்ப்பு
நூல்கள், சுயசரிதை என படைப்புலகில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்
ஜெயகாந்தன்.
கடலூரில் 24-4-1934-இல் பிரந்தார்.
இவரது இயர்ப்பெயர் முருகேசன்.
பள்ளிப்படிப்பின் மேள் இவருக்கு நாட்டமில்லை;
12 வயதில் கமியூனிஸ்ட்
கட்சியில் இனைந்தார். அங்குதான் தமிழ் இலக்கண இலக்கியங்களையும்,
ஆங்கிளத்தையும் கற்றார்.
1948-இல் கமியூனிஸ்டுகள் தடைசெய்யப்பட இவரின்
எழுத்துலகப்பயணம் தொடங்கியது.
தாமரை, சரஸ்வதி, கிராம ஊழியன், போன்ற
இதழ்களில் இவரது கதைகள் தொடக்கத்தில் பிரசுரமாகின.
விகடனில் எழுதிய போது
இவரின் கதைகளுக்கு முற்கூட்டியே விழம்பரங்களும் வெளிவந்தன.
நடுத்தர
வர்க்கத்தினர் பலரும் கல்வி கற்கத்தொடங்கிய காலமது அவர்கள் கைகளில்
ஜெயகாந்தனின் எழுத்துக்கள் தவழத்தொடங்கின.
அவர்களின் வாழ்க்கையையே அவர்
எழுதுவதாக நம்பினர்.
எழுத்துலகில் அனைவராலும் கவனிக்கத் தக்க எழுத்தாலராக மாரினார்.
இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஜெயகாந்தனுக்கு உலகமே வீடாகியது.
"சின்னஞ்சிறு வயதில் இருபத்தொரு வேலைகள் செய்திருக்கிறேன்.
ஒவ்வொரு
வேலையில் சேரும்போதும் அதிலேயே வாழ்க்கை முழுவதும் கழியப்போகிறது
என்று
நினைத்துக் கொள்வேன்.
ஆனால், என் சுபாவம் நெடுநாள் ஒரு வேலையில் இருக்க விடாது. ஐஸ்
பெட்டி
தள்ளியிருக்கிறேன். தஞ்சாவூரில் குதிரை வண்டிக்காரனுக்கு துணையாக
வேலை
பார்த்திருக்கிறேன். நான் அதிக நாள் பார்த்த வேலை புத்தகம் பிழை
திருத்துவது. ஆனால், வெளியில் சொல்லக்கூடாது,தப்பான எந்த ஒரு
வேலையையும்
செய்ததில்லை.
மானமான எந்த வேலையும் செய்து பிழைக்க நான் தயாராக இருந்தேன்.
அதுதான்
நான்' என்றார் ஜெயகாந்தன்.
அந்த அனுபவம் நடைமேடைவாசிகளைக்கூட நம் முன் எதார்த்தமாய் எழுத்துக்களூடே
விரியச்செய்தது.
இவரது அக்னிபிரவேசம் என்ற கதை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அதுவே
சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவல் தோன்ற காரணமாய் இருந்தது.
ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம், யாருக்காக அழுதான், சினிமாவுக்குப்போன
சித்தாலு பொன்ற நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.
இயக்குனர்கள் பீம்சிங்,
ஸ்ரீதரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சினிமா பற்றி கடுமையான
விமர்சனங்களை கூரினார் ஜெயகாந்தன்;
எங்கே நீ ஒரு படம் எடுத்துக்காட்டு
என்று இருவரும் சொல்ல; அவர் எடுத்த திரைப்படந்தான் உன்னைப்போல்
ஒருவன்
இது 1965 மானில மொழிக்கான தேசிய விருதை பெற்றது.
அக்கால கட்டத்திலேயே
மாற்றுச்சினிமாவை முன் வைத்தவர் ஜெயகாந்தன்.
அவர் நாவலுக்கு எழுதும்
முன்னுரைகளும் பிரசித்திபெற்றவையே. எதையும் மரைத்து பேசாது
வெளிப்படையாகவே கூரிய அம்புபோல் வாசகங்கள் அந்த முன்னுரையில்
இருக்கும்.
அன்னா மரைந்த போது அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிழப்பியது.
பெரியார் முன் மேடையில் பாரதம் பற்றி பேசினார். அப்போது பெரியார்
கூரினார் இதுவரை நம் கேழ்விகளுக்கு இவர் ஒருவர்தான் பதில் சொல்லி
இருக்கிரார் என்றார். mgr-க்கும் இவருக்கும் ஒரு பனிப்போரே நடந்தது.
அதன்
விலைவாகவே சினிமாவுக்குபோன சித்தாலு என்ற நாவல் உதித்தது.
• இவர் நன்பர்களோடு அமர்ந்து
விவாதிப்பதும் ஒரு அலாதியான அனுபவம்.
ரிச்சாகாரர் முதல்
எழுத்தாளர்கள் வரை அச்சபையில் அமர்ந்திருப்பர்.
கர்னாடக இசையில் இவருக்கு நாட்டம் உண்டு நன்றாக பாடக்கூடியவர்.
இவர்
பாரதியின் கவிகளை சொல்லும்போது அத்தனை கம்பீரமாய் இருக்கும்.
பாரதியின்
கவிகளை சொல்லும் போது உங்களுடைய கவிதையைபோல் சொல்கிறீர்களே
எனக்கேட்டபோது? அது என்னுடைய கவிதைதானே அப்பா சொத்து மகனுக்குத்தானே
என்று சொன்னாராம். மேடைகளில் கடுமையாக பேசினாலும் எழுத்துக்களூடே
அவர்
துவேசத்தை விதைத்ததில்ளை. எக்கருத்தையும் அஞ்சாமல் சொல்லக்கூடியவர்.அன்று
அப்படிச்சொன்னீர்களே இன்று இப்படி சொல்கிறீர்களே எனக்கேட்டால்?
அன்று அது
சரியனப்பட்டது அப்படிச்சொன்னேன் இன்று இது எனக்கு சரி யெனப்படுகிறது
நான்
இப்படிச்சொல்கிறேன் என்பார். சாகித்திய அக்காடமி, ஞானபீடம்,
பத்மபூசன்
ரஸ்ய விருது போன்ற விருதுகளை பெற்றார். இவர் இடது சாரிகளை
வெருத்தபோதும்; இடது சாரி சிந்தனைகளை வெருக்கவில்லை. ஏற்றிவிட்ட
கமியூனிஸ்ட் கட்சியின் மீது அவருக்கு நண்றி உணர்வு இருந்தது.
அவர்
எழுத்துக்கள் பற்றி விமர்சனங்கள் வந்த போது இப்படிக்கூரினார்.
நான்
தெய்வாதினமாக எழுதவில்லை. நான் தான் என்ன எழுத வேண்டுமென்று
முடிவு
செய்கிறேன். கதையின் முடிவுகள் துக்ககரமாக இருக்கக்கூடாதென்று
நினைக்கின்றனர். இங்கு அதனால் தான் ராமாயனத்தை பட்டாவிசேகத்தோடு
நிருத்திக்கொள்ளுகின்றனர்.
என்றார். காந்தி இரந்தபோது நான் பத்திரிக்கை
விற்றுக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 14 வயது. டிராம் வண்டியில்
பத்திரிக்கையை வாங்கியவர்கள் அந்த செய்தியை பார்த்ததும் அழத்தொடங்கினர்.
பத்திரிக்கைகளைவிற்றுவிட்டு கீழ் இரங்கி பத்திரிக்கையை பார்த்தேன்
காந்தியின் மரைவு செய்தி இருந்தது. எங்கள் ஊரில் கோபுரத்தின்
மேள் காந்தி
சிலை இருக்கும்; கோபுரத்தில் உள்ளது சாமி என்றே நினைத்தேன் சாமி
எப்படி
சாகும் என நினைத்து அழுதேந். என்றார்.
• காந்தியின் மீதுள்ள ஈடுபாட்டால்
ரோமன்ரொலந்து எழுதிய காந்தி வாழ்க்கை
வறலாற்றை தமிழில் மொழிபெயர்த்தார்.
• அனைவரையும் நேசியுங்கள் என்பார்.
அந்த நேசத்தையே கதைகளாய் எழுதினார்.
சிறப்பாக சிந்திக்கும் ஆண்களையும் பெண்களையும் படைப்புக்கலூடே
நடமாடச்செய்தார்.
• அவர் வெகுசனப்பத்திரிக்கைகளில்
எழுதினாலும்; வெகுவான சனங்களை
சிந்திக்கச்செய்தார். பிரபலங்களின் மரைவு குரித்து ஜெயகாந்தன்
கூரியது.
• • "அரசாங்க அலுவலகங்களில்
மகான்களின் மரணத்துக்காக கொடிகள்
தாழப்பறக்கட்டும். அவர்கள் நினைவாகப் பிரார்த்தனைகள் நடக்கட்டும்.
ஆனால்,
எது குறித்தும் எல்லாரும் கும்பல் கூடி அழவேண்டாம். ரேடியோக்காரர்கள்
தங்களது பொய்த்துயரத்தை காற்றில் கலப்படம் செய்யாதிருக்கட்டும்"
• 8-4-2015 அன்று அவரின் பூத உடல்
மரைந்தாலும்; எழுத்துக்கள் என்னும்
புகழுடலோடு என்றும் நம்மோடே வாழ்வார் ஜெயகாந்தன்.
அவரது எழுத்துக்களைப்படிப்பதே அவருக்கு செய்யும் அஞ்சலி.
• தமிழ் வாசகர்கள் மனதில் அவர் ஏற்றி
வைத்த அறிவு தீபம் என்றும் அனையாது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக