பக்கங்கள்

இங்கே துலாவு

வியாழன், 4 ஜூன், 2015

காத்திருப்பு!



காலச்சக்கரம் கையில் கிடைத்திருந்தால்;
     கடும்வேகத்தில்
சுற்றி ஞாயிற்று கிழமையில் நிருத்தி இருப்பேன்.
ார் வருவார்கள்?
 அன்புள்ள அம்மாவா?
அறிவுரை கூறும் அப்பாவா?
ன்ன கொண்டுவருவார்கள்?
இனிப்பான கேசரியா!
வாசமுள்ள வருத்த கரியா!!!!!!
னதிற்குள் மையங்கொண்டது எதிர்பார்ப்பு புயல்.
தம்பிப்பயல் எப்படி இருக்கிறான்?
ஆட்டுக்குட்டியின் ஆரோக்கியம் எப்படி?
மாடு கன்றுபோட்டதா?
மாமரம் காய்த்துவிட்டதா?
ினாப் பட்டியல் விரிவடைந்தது;
நாட்கள் தான் நகர மருத்தது.
ட்டாயம் வருவார்களா?
என காக்கை இடம் கேட்டு கன்பாம் செய்தேன்;
ிரைவாக வரச்சொல்லு என
கடவுலுக்கும் இன்பாம் செய்தேன்.
ிளையாட விருப்பமில்லை;
விருந்துசோறு இரங்கவில்லை.
ஞாயிறு பொழுது புழர்ந்தது;
முகமும் மகிழ்ச்சியில் மளர்ந்தது.
ாடன் வந்து சொன்னார்;
இந்த வாரம் இல்லையாம்;
வரும் வாரம் வருவார்கலாம்.
வலையில் கழண்டு விழுந்தது கண்ணீர் துலி;
 அடுத்து அந்த 6 நாட்களை கடத்த என்ன வழி?
   இக்கவிதை நான் 5-ஆம் வகுப்புவரை புதுக்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் போது;
ஞாயிற்றுக்கிழமைகளில் பெற்றோரை  எதிர்பார்த்து தவித்த தருனங்களை நினைத்து;
12-ஆம் வகுப்புப்படிக்கும் போது வடித்த கவிதை இது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக