இங்கே துலாவு

ஞாயிறு, 14 ஜூன், 2015

அரிவாள்:





         ரிவாள்:


      (முட்களின் மீது மட்டுமல்ல
புற்களின் மீதும் போராடுவது கடினம்)

   டென்னிஸ் மைதானங்கல் புல்தரையாகவோ,
களிமண் தரையாகவோ இருக்கும். போராட


அழைக்கும் புல்தரைகளே விம்பிள்டன்
களங்கள். ஜூன் இறுதித் திங்கள் முதல்
ஜூலை இரண்டாவது ஞாயிறு வரை நடக்கும்
திருவிழாவே விம்பிள்டன் போட்டிகள்.
 டெனெ என்ற பிரஞ்சு சொல்லிலிருந்து டென்னிஸ்
என்ற ஆங்கிலச் சொல் வந்தது.
இச்சொல்லுக்கு பிடித்துக்கொள் [take it] என்று பொருள்.
இங்கிலாந்தில் நடக்கும் விம்பில்டன்னுக்கு
ஜெண்டில்மேன் கேம் என்ற பெயரும் உண்டு.
இங்கிலாந்தில் ஜெண்டில்மேன்கள் இல்லையா? என கேட்கிறது அயர்லாந்து.
காலனி ஆதிக்கத்தால் வளங்களை சுரண்டியது போதாது என
விளையாட்டு வீரர்களையும் இழுத்துக்கொண்டது
இங்கிலாந்து என, அயர்லாந்து மக்கள் ஆத்திரப்படுகின்றனர்.
  76 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆங்கிலேயர் பட்டம் வெண்றார்;
என ஊடகங்கள் கூறினாலும்; இம்முறை பட்டம் வென்றவர்
ஆண்டிமொரே இவர் அயர்லாந்துக்காரர்;
ஆனால் ஆடியது இங்கிலாந்துக்காக. வீரர்களை
உருவாக்க வேண்டுமே தவிர பிற நாட்டு வீரர்களை அபகரிக்கக் கூடாது.
இங்கிலாந்து பிராந்திய அணிக்காக விளையாடும் வெளிநாட்டு வீரர்கள்
நேரடியாக இங்கிலாந்து தேசிய அணிக்குள் நுழய முடியும் என்ற
கவர்ச்சிகரமான திட்டமே இதற்கு காரணம். அயர்லாந்து கிரிக்கேட் வீரர்களான
ராங்கிங், அஸ்லிஜாய்ஸ், அயின்மோகன், குரோ, போன்றவீரர்கள்
இங்கிலாந்துக்காக விளையாடி வருகின்றனர். இதில் மோகன்
t20 அணித்தலைவர். பல நாட்டு வீரர்கள் இங்கிலாந்துக்காக விளையாடினாலும்
அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ அயர்லாந்துதான்!
இதற்கு முக்கிய காரணம் தேச பற்றை பிந்தள்ளிவிட்டு
பண மீதான மோகம் முன்னிற்ப்பதுதான்!
   முதல் விம்பிள்டன் போட்டி 1877-ஆம் ஆண்டு
நடந்தபோது இறுதிப் போட்டியில் வென்றவருக்கு, அரங்கில் இருந்த
200 பார்வையாலர்கலிடமிருந்து 20 சில்லிங்
[இங்கிலாந்து பணம் 2 பவுண்ட் இந்திய பண மதிப்பு 160 ரூ]
வாங்கி வாகையர் பட்டத்தை வென்றவருக்கு கொடுத்தனற்.
பெண்ணுக்கு ஒரு வாலியை பரிசாகக் கொடுத்தனர் இது ஒரு
சர்வதேச போட்டிக்கான பரிசு என்றால் நம்புவீர்களா!
ஏனெனில் விளையாட்டை விளையாட்டுக்காக ஆடினர்.
விம்பிள்டன் பட்டம் வென்ற ஒரே கருப்பின வீரர் ஆர்தர் ஆஸ்; இவர் ஆப்பிரிக்க வம்சாவழி அமேரிக்கர். இவரின் நினைவாக அமேரிக்க பகிரங்கப் போட்டிகளின் [american oppen]]
முதல் நாள் சிறுவர்களுக்கான டென்னிஸ் போட்டி வைத்து அதில் கிடைக்கும்
நிதியை உலக சிறுவர்கள் நல நிதியத்துக்கு கொடுக்கின்றனர். இன்று ஊழலை படம்பிடிக்கும் ஊடகங்கள் விளையாட்டு வீரர்கள் உதவுவதை ஒருபோதும் சொல்வதில்லை.
7 முறை விம்பிள்டன் பட்டங்களை வென்ற காதல் தம்பதி ஆன்ரோ அகாசி, ஸ்டெப்பிகிராப்.
இருவரும் ஆண்டு தோரும் சிறுவர் நல நிதியத்துக்காக பல மில்லியன் டாலர்களை கொடுத்து வருகின்றனர்.
ஒரு முறை அகாசி தன் மனைவி ஸ்டெப்பிகிராப் குழிக்கும் மங்களான புகைப்படத்தை
ஏலம்விட்டு அதில் வந்த பணத்தை கச்டப்படும் குழந்தைகளுக்காக செலவளித்துள்ளார்.
  ஒரு பெரிய மீசையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜான்சன் வைத்திருப்பதை கவனித்திருப்பீர்கள்.
அவர் வைத்திருப்பதே அனைவரையும் கவனிக்க வைக்கத்தான்.
அந்த தனித்துவமான மீசையை கோடி ரூபாய்க்குக்
காப்புறுதி செய்துள்ளார். அந்தத்தொகையை
ஆப்பிரிக்க ஏழை சிறுவர்களின் நலத்துக்காக அளித்துள்ளார்.
2004-ல் ஊதிய பிரச்சனை தலைவிரித்து ஆடியது மேற்கிந்தியதீவுகள் கிரிக்கேட்டில்;
இருந்த போதும்  தேசப்பற்றுடன் விளையாடி மினி உலகக் கிண்ணத்தை
அந்த அணி கைப்பற்றியது.
 அப்பொழுது அந்த நாடு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது
உலகக் கிண்ண பரிசுத் தொகையையும், அந்தத் தொடர் முழுவதும் தாங்கள் பெற்ற ஊதியம் முழுவதையும் வெள்ள நிவாரண நிதியாக வீரர்கள் அனைவரும் கொடுத்தனர்.
  விளையாடி மக்களை மகிழ்விக்கும் வீரர்கள்,
அதன்மூலம் கிடைத்த பணத்தை கொண்டு மக்கள் துயர் துடைத்த வரலாறு இது.
விளையாட்டு வளத்தையும் சுரண்டுகிறது; மக்கள் நலத்தையும் காக்கிறது.
கையில் உள்ள அரிவாளை வைத்து, ஆட்டின் பசியைத் தீற்க கிளைகளையும் வெட்டலாம்;
மனித பசியைத் தீற்க அந்த ஆட்டையும் வெட்டலாம். இதில் எது சரி என்பதை
தாங்களே தங்கள் அறிவால் முடிவு செய்துகொள்ளுங்கள்
விளையாட்டு வீரர்களே!
2012-இல் விழிச்சவால் எனும் பார்வையற்றோருக்கான இதழில்
வெளிவந்த கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக