இங்கே துலாவு

வியாழன், 3 டிசம்பர், 2020

கைகுலுக்க வாருங்கள்


இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். இன்று இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில், பார்வை மாற்றுத்திறனாளிகளின் அருகே பார்வை உள்ளவர்கள் அமர்ந்து கொண்டு இருசக்கர வாகனம் முதல் விமானம் வரை ஓட்டவைத்து மகிழ்கிறார்கள்.  அவர்களது குட்டி குட்டி ஆசைகளை

நிறைவேற்றுகிறார்கள். அதாவது பார்வையற்றவர்கள் காணாத ஒன்றை தொட்டுக் காட்டுகிறார்கள். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் அன்றாட வாழ்வில் காணும் பறவைகள் விலங்கினங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தொட்டுக் காட்டுகிறார்கள். இதில் முக்கியமாக கோடிட்டு காட்ட வேண்டியது, மாற்றுத்திறனாளிகளை எவ்வித உடல் குறைபாடும் இல்லாதவர்கள் அனுகி அவர்களை சந்தோஷப்படுத்தி தாங்களும் சந்தோசமடைகின்றனர்.


இத்தகைய நிகழ்வுகள் தமிழகத்திலும் நடக்க வேண்டும். பார்த்தல், பேசுதல், தன்னிச்சையாக இயங்குதல் என பலவற்றிலும் சிக்கலை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் பொது சமூகத்தோடு கைகுலுக்க தொடர்ச்சியாக எட்டுவைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், பொது சமூகம் அவர்களை நோக்கி காலடிகளை எடுத்து வைப்பதாகத் தெரியவில்லை. இரு சமூகமும் எட்டுவைத்து முன்னோக்கி நகர்ந்து வந்தால் தான், விரைந்து ஒன்றாய் கைகுலுக்க முடியும்.


முதலில் நீங்கள் எங்களுடன் பேசுங்கள். பார்வை மாற்றுத்திறனாளியை ஒரு உதவியாளர் அழைத்து வருகிறார் என்றால், நீங்கள் பார்வை மாற்றுத்திறனாளி சொல்வதற்கு செவி கொடுப்பதே இல்லை. அந்த உதவியாளரிடமே உரையாடலை நிகழ்த்துகிறீர்கள். பார்வை மாற்றுத்திறனாளி என்றாலே அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைக்கிறீர்கள். இத்தகைய அணுகுமுறைகளுக்கு முக்கிய காரணம் மாற்றுத்திறனாளிகள் குறித்த அறியாமை.


இன்னும் இங்கே, மாற்றுத்திறனாளிகள் தினம் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு உரியது என்று, அவர்கள் மட்டுமே ஒரு குழுவாக அன்னாளை அனுசரித்துக் கொண்டிருக்கிறார்கள். .

                            அணுகுவது, அவர்களுக்கான மருத்துவ வசதிகள் என்னென்ன இருக்கிறது, அவர்களுக்கான தொழில்னுட்பங்கள் எவை, அவர்கள் கல்வி பயிலும் முறை, எங்கே கல்வி பயிலலாம் போன்றவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

உலகத்தில் எல்லா பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம் அறியாமை. சமூகம் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது நிகழ்த்தும் ஒடுக்குமுறை மற்றும் பாரபச்சம் உள்ளிட்ட அனைத்திற்கும் காரணம், அவர்கள் மீதான புரிதலின்மை. இந்த அறியாமையை நீக்கினாலே போதும். அனைத்தும் சரியாகிவிடும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக