பக்கங்கள்

இங்கே துலாவு

சனி, 29 மார்ச், 2025

நான் மின்னூலாக்கிய அச்சு நூல்கள்

ஆவணப்படுத்தும் நோக்கில் 'இதுவரை நான் மின்னுலாக்கிய அச்சுப் புத்தகங்களின் பட்டியலை பகிர்கிறேன்.

வியாழன், 8 பிப்ரவரி, 2024

எங்க பள்ளி நல்ல பள்ளி: ஆண்டு விழா பாடல்

பள்ளி ஆண்டு விழாவிற்காக நீண்ட நாளைக்கு பிறகு ஒரு பாடலை எழுதியிருந்தேன். பள்ளி விழாக்களுக்கு பாடல் எழுதுதல் என்பது கஸ்ட்டமில்லை. லகுவான வரிகள், மாணவர்கள் தங்களை பொருத்திக்கொள்ளும் சில நிகழ்வுகள் இருந்தால் போதும். கைதட்டை வாங்கிவிடலாம்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கார்ப்பரேட் முதலாளிகள் மீதான கடுப்புக்கு காரணம்

கார்ப்பரேட் முதலாளிகள் என்றாலே நமக்கு ஏன் இத்தனை கடுப்பு வருகிறது என்ற காரணத்தைக் காலையில் கக்கூசில் அமர்ந்திருக்கும் பொழுதுதான் கண்டுபிடித்தேன்.

நம் சமூகத்தில் பலரது கனவுக் கன்னிகளாக இருந்த கதாநாயகிகளைப் பின்னாளில் ஏதோ ஒரு தொழிலதிபர்தான் கல்யாணம் செய்துகொள்கிறார். கனவுக்கன்னிகளை இழந்த கையறு நிலைதான் ஆழ்மனதில் வெறுப்பாக குடிகொள்கிறது. அந்த ஆழ்மன வெறுப்புதான் கார்ப்பரேட் முதலாளிகள் என்ற வார்த்தையைக் கேட்டதும் கிளர்ந்தெழத் தூண்டுகிறது. ஆண் மகன்களின் மனசாட்சியாக கவுண்டமணி  திரையில் "இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியல" என்று சொல்லும் போது, அது நம்மை கைதட்டி ஆரவாரிக்க சொல்கிறது.