இங்கே துலாவு

திங்கள், 5 டிசம்பர், 2016

: எங்கள் விடுதியின் வரவேட்பு விழா பாடல்

கேட்டுக்கோ புது நியூசு;
சொல்லுரோம் நியூ ரூல்சு.
படிக்கிறோம் காலேஜு;
இருக்கனும் நாலேஜு.
5 ஏயமுக்கு எழும்பனும்;
10 பீயமுக்கு உரங்கனும்;
அதுக்கு எடயிலதான் வாழ்க்கய நாம ஓட்டனும்.



போர்வத்தட்டுக்கொரு நம்பரு;
அதப்பாத்துக்க மெம்பரு;
இருக்கும் ஸ்டூடன்செள்ளாம் நன்பரு,
நம்ம நன்பரு.
6 மனியானாக்க தட்டு டிப்பன் எடுத்துட்டு;
டைனிங்காலில் நீங்கள்ளாம் டான்னு இருக்க வேனும்.
மத்தியான பீஸ்ட்டுன்னா 7 மனிக்குத்தருவாங்க;
கொஞ்சனெஞ்சம் இருந்தாலும் கொட்டிக்கிட்டு போனும்.
வடையும் பழமும் இல்லேன்னா சாரி கேட்பாங்க;
தட்டி நீயும் கேட்டாலே தருனம்பாப்பாங்க;
மூனு வருசம் நீ படிக்கனும்;
மூடிக்கிட்டுதான் இருக்கனும்;
இளமை இரத்தத்த அடக்கனும்,
நீ அடக்கனும்.
தட்டி நீயுந்தாங்கேட்டுட்டா
பெட்டி தூக்கிக்கிட்டுப்போகனும்;
மானங்கெட்ட ஒரு மட்டயா நீ இருக்கனும்.
புது ட்றெஸ்ச நீங்கதான் தொவச்சு காயப்போட்டாலே;
மடிச்சுவைக்க முடியாது சத்தியமா சொல்றோம்.
கெஸ்டு யாரும் வந்தாலே கொடியவுக்கப்பாப்பாங்க;
காசு ட்றெஸ்சு காணுன்னா கம்பி நீட்டுவாங்க.
சட்டம் என்பது நிறந்தரமல்ல அவரவர் வைத்ததுதான்;
சொந்தம்மிங்கே சுதந்திரமாச்சு யாரும் சுற்றந்தான்.

எங்கள் விடுதியில்  படிக்கவரும் மாணவர்களுக்கு அங்குள்ள சூழலை விளக்குவதற்காக நான் எழுதிய பாடல் இது.
இதை யூட்டூப்பில் கேட்டுத்தான் பாருங்களேன்!


6 கருத்துகள்:

  1. நல்ல பாடல்....

    உங்கள் வலைப்பூவிற்கு எனது முதல் வருகை.... பாராட்டுகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. ஹாஸ்டல் வாழ்க்கை எல்லாக் காலத்திலேயும் இப்படித்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவையேல்லாம் யுனிவர்சல் ட்றூத் என்றுமே மாறாது மேடம்!

      நீக்கு